தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Monday, 23 October 2017


Saturday, 21 October 2017

நிதானம்

நிதானம்!
========
புத்தரிடம் சீடனாகச் சேர்ந்த ஒருவன் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்காமல், அவசரத்தையும் தீவிரத்தையும் கடைப்பிடித்தான். அவனுக்கு அறிவு புகட்ட நினைத்த புத்தர் ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, அவனுடைய அறையிலிருந்த வீணையை எடுத்து வரச் சொல்லி, அதை மீட்டச் சொன்னார். அவனும் வீணையை மீட்டத் தயாரானான்.
அப்போது, புத்தர் வீணையின் நரம்புகளை முறுக்கேற்றினார். அவனோ, "ஐயனே, இப்படி முறுக்கேற்றினால் நரம்புகள் அறுந்துவிடுமே?'' என்றான்.

உடனே புத்தர், நரம்புகளைத் தளர்த்தத் தொடங்கினார்... அவனோ, "ஐயனே, இப்படிச் செய்தால் வீணையை இசைக்க முடியாதே?'' என்று கேட்டான்.

இப்போது புத்தர் சொன்னார், "நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலுமே வாழ்வின் தத்துவம் உள்ளது. வீணையின் நரம்புகளை அதிகம் இறுக்கினால் அறுந்து போகும். அதிகம் தளர்த்தினாலோ ஒலி எழாது. இதோ போலத்தான் முறையற்ற அதிகப் பயிற்சியினால் உடல் தளர்ந்து விடும். குறைவான உழைப்போ சோம்பலைத் தரும்.

எனவே எதையும் நிதானமாகச் செய்யப் பழகு. வாழ்வில் சாதிப்பாய்

Thursday, 19 October 2017

வேலூர் மாவட்டத்தில் 146 ஏரிகள் முழு கொள்ளவை எட்டின

*வேலூர் மாவட்டத்தில் 146 ஏரிகள் முழு கொள்ளவை எட்டின*

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின்⛈ காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், தமிழக, ஆந்திர மாநில எல்லையில் பெய்த கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பின.

மோர்தானாவுக்கு 700 கன அடி ராஜா தோப்புக்கு 93.97 கன அடி, ஆண்டியப்பனூர் அணைக்கு 67.43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில், 62 ஏரிகள்🏞 முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 32 ஏரிகளில் 75 சதவீதமும், 75 ஏரிகளில் 50 சதவீதமும், 350 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீர் நிரம்பியுள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….

*வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….*

இப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….

18/10/2017

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, *“லைவ் ஷேரிங்”* எனப்படும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாம் எங்கு இருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதை நாம் படத்துடன் தெரிவிக்க முடியும், அத்துடன் நமக்கு வேண்டியவர்களுடன் சாட்டிங்கிலும் ஈடுபடமுடியும்.

உலகம் முழுவதும் 20 கோடி வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான “ஷேரிங்” வசதியைப் போல் இல்லாமல், அதாவது எந்த இடத்தில் நிலையாக இருக்கிறோமோ அதைக் குறிக்காமல்,  நாம் எந்த இடத்தில் சென்று இருக்கிறோமோ(“லைவ் ஷேரிங்” ) அந்த இடத்தை நமக்கு விருப்பப்பட்டவர்களுக்கு தெரிவிக்க முடியும். வாட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் பாதுகாப்புக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவர்களின் தங்களின் நண்பர்கள்,  குடும்ப உறுப்பினர்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா, நாம் செல்லும் இடத்துக்கு பாதுகாப்பாக அடைந்துவிட்டோமா என்பதை தெரிவிக்க இந்த வசதி பயன்படும்.

இதற்கு முன் உபர், ஸ்நாப் மேப் ஆகிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருந்தன. இந்த நிறுவனங்களுக்கு அடுத்தார்போல் இப்போது வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் மேலாளர் ஜூகைர் கான் கூறுகையில், “ வாட்ஸ்அப் லைவ்ஷேரிங் வசதிக்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக பணியாற்றினோம். அதன் பயனாக இப்போது நாம் ெசல்லும் இடங்களை நமக்குவிருப்பப்பட்டவர்களுக்கு அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.

*எப்படி இந்த வசதியைப் பெறுவது?*

வாட்ஸ் அப் பயன்படுத்திவருபவர்கள் கூகுங் ப்ளே ஸ்டோரில் சென்று, “அப்டேட்” செய்ய வேண்டும். அப்டேட் முடிந்தவுடன், நம்முடைய கான்டாக்ட் தளத்தில் சென்று யாருக்கு நம்முடைய இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த இடத்தை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டு, லைவ் சாட்டிங்கிலும் ஈடுபட முடியும். நாம் செல்லும் இடத்தை தனிப்பட்ட ஒரு நபருக்காகவோ அல்லது ஒரு குரூப்புக்கோ பகிர்ந்து கொள்ள முடியும்.

Tuesday, 17 October 2017

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
---------------------------------------------------
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், 5,000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதால், இன்று(அக்.,16) காலை, பார்வையாளர்களுக்காக சரணாலயம் திறக்கப்படுவதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை, 6:30 மணிக்கு, வனச்சரக அலுவலர் சுப்பையா, சரணாலயத்தை பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கிறார்.

தற்போது, நத்தகொத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா போன்ற பறவைகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு போல், இந்தாண்டும், 25 ஆயிரம் பறவைகளுக்கு மேல் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது

Monday, 16 October 2017

பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு... சார்

குடி போதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்த வனை லத்தியால் தட்டி எழுப்பிய அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன் கேட்டார்.

"ஏய்! தலைகால் புரியாம விழுந்து கெடக்கிறியே, எவ்வளவு குடிச்சே?"

"சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்."

“ஏன்யா... இப்படி நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேணாம்?”

கேட்ட அந்த கான்ஸ்டபிளைப் பார்த்து  வருத்தத்துடன் சொன்னார்.

“நெலம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப் போச்சு.!”

சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே தனிந்த குரலில் கேட்டார்.

“அப்படி என்ன கட்டாயம்.?”

கான்ஸ்டபிள் கேட்டதும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரைப் பார்த்துச் சொன்னார்.

”பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு... சார்.!”

😂😂😂

Saturday, 14 October 2017

என் தாய்மொழி

என் தாய்மொழி

வலிக்கையில்  -  அ, ஆ
சிரிக்கையில்   -   இ, ஈ
காரத்தில்          -   உ, ஊ
கோவத்தில்      -   எ, ஏ
வெட்கத்தில்     -   ஐ
ஆச்சரியத்தில் -   ஒ, ஓ
வக்கணையில் -  ஔ
விக்கலில்          -   ஃ என்று

நம்மையறியாமல் தினமும் தமிழை
சுவாசித்துக்கொண்டு தான் இருக்கிறோம்

என்
தாய்மொழி
👌👌👏🏼👏🏼