சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு ✍தேர்வு முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது💻. மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு ✍முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் மாணவர்கள் கவலை அடைந்திருந்தனர்😟. இந்நிலையில் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி (இன்று ) காலையில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது🔈. மேலும், ✍தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய 💻இணையதளங்களில் பார்க்கலாம் என்று சிபிஎஸ்இ மக்கள் தொடர்பு அதிகாரி 👮ராமசர்மா அறிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS