*WhatsApp*-ல் புதிதாக சில எழுத்துருக்களைப் பயன்படுத்தும்படி அதன் நிரல்மூலத்தை மாற்றி அமைத்ததுள்ளனர்.
இது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்சாப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது.
அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது நான் இங்கு விளக்கப் போகிறேன்.
*தடிப்பெழுத்து :* சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச் (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும்.
எ.கா:
*balabarathi * * பாலபாரதி * என்று எழுதினால்
*balabarathi பாலபாரதி*என்று தடிப்பாகத் தோன்றும்.
• _சாய்வெழுத்து :_ சொற்களுக்குமுன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும்.
எ.கா. _பாலபாரதி _ என்று எழுதினால்
_பாலபாரதி_ என்று சாய்வாகத் தோன்றும்.
• ~நடுக்கோடு :~ சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். எ.கா. ~ பாலபாரதி~ பாலா என்று எழுதினால், ‘பாலபாரதி’ எனும் சொல் நீக்கப்பட்டு 'பாலா' என்று எழுதப்பட்டதைப்போலத் தோன்றும் : ~பாலபாரதி~ பாலா
வார்த்தைகளுக்கு மட்டும் அல்ல, வாக்கியங்களுக்கு முன் பின்னும் இதனை சேர்ப்பதால் எழுத்துருக்களில் மாற்றம் கொண்டுவர முடியும்.
இதனைக் கொண்டு நாம் *குறிப்பிட்டு காட்டவேண்டிய வார்த்தைகளை* அப்படியே காட்டலாம்.
உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
*நன்றி*
COMMENTS