flipkart


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Thursday, 19 April 2018

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!!

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!!

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.

பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,
வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்...

Wednesday, 18 April 2018

காலாவதியான குளிர்பானம் 25 ஆயிரம் பாட்டில் பறிமுதல்

காலாவதியான குளிர்பானம் 25 ஆயிரம் பாட்டில் பறிமுதல்

⛰பழநியில் பிரபல குளிர்பான கம்பெனியின்🏢 குடோனில் இருந்து காலாவதியான 25 ஆயிரம் பாட்டில்கள்🍾 பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை😳 ஏற்படுத்தி உள்ளது. கோயில்🙏 நகரான திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்🚊, வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள்👥 வந்து செல்கின்றனர். பக்தர்கள் வாங்கும் குளிர்பானங்களில்🍾 பெரும்பாலானவை காலாவதியானவையாக😯 இருப்பதாக புகார் எழுந்தது🗣. இதன் அடிப்படையில் நேற்று இரவு🕘 பாதுகாப்பு அதிகாரிகள் புதுதாராபுரம் சாலையில்🛣 உள்ள தனியார் குளிர்பான நிறுவன ஏஜென்சியின் குடோனை திடீர் சோதனை🔎 செய்தனர். சோதனையில், 25 ஆயிரம் குளிர்பான பாட்டில்கள்🍾 காலாவதியாக இருப்பது தெரிய வந்தது😯. அவற்றை பறிமுதல் செய்த 👮அதிகாரிகள் குடோனை பூட்டினர்🔒.

நற்றிணை நேயர்களின் நீண்ட நாளைய வேண்டுகோளின்படி

நற்றிணை நேயர்களின் நீண்ட நாளைய வேண்டுகோளின்படி

🌹 நற்றிணை இணைய தளத்தில் வெளியாகும் . தினசரிப் பதிவுகள் அனைத்தும் Telegram செயலியிலும் இன்று முதல் பதிவேற்றம் செய்யப்படும்.

🌹 Telegram செயலியை உடனடியாய் பதிவிறக்கம் செய்யுங்கள்

🌹 இங்குள்ள *சொடுக்கி* மூலமாக நற்றிணையில் இணைந்திடுங்கள்.

🌹 நற்றிணை வழங்கும் அனைத்து தகவல்களையும் ருசித்து மகிழுங்கள்.

http://t.me/natrinai

Tuesday, 17 April 2018

லஞ்சம் பெற்ற விவகாரம்-உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

லஞ்சம் பெற்ற விவகாரம்-உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

லஞ்ச ஒழிப்பு🚫 போலீசாரின்👮 பிடியில் சிக்கியுள்ள 👮உதவி கமி‌ஷனர் கமீல்பாஷா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது👍. இரண்டு நாட்களுக்கு முன்னர், காவல் 👮உதவி ஆய்வாளர் கமீல் பாட்ஷா 🏢அலுவலகத்தில் 💸ரூ.5.08 லட்சம் ஊழல் தடுப்பு சட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்😰. இதனையடுத்து தற்போது அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது👏. மேலும் அவர் பதவியில் உள்ள நபர் என்பதால்🙄 சாட்சிகளை கலைக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவரை கைது⛓ செய்யலாம் என்ற முடிவில் 👮அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்😳. இந்நிலையில் 👮கமீல் பாட்ஷா மீது துறை ரீதியிலான நடவடிக்கையும் பாயும்👍 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.

நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை⁉

நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை⁉

🎥‘இம்சை அரசன் 24ம் புலிகேசி-2' படத்தில் நடிக்க நடிகர் ⭐வடிவேலு மறுத்ததால்🚫 அந்த படத்தின் 💸தயாரிப்பாளரான இயக்குனர் 🎬ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்😯. அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது🙄. நடிகர் சங்கம் சார்பில் ⭐வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன👍. அதற்கு பதிலளிக்கும் விதமாக, திட்டமிட்டபடி 📹படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு 💸பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது😟 என்றும், தற்போது வேறு 🎥படங்களுக்கு 📆தேதி ஒதுக்கி நடித்து வருவதால் 🎥'இம்சை அரசன் -2' படத்தில் நடிக்க முடியாது🚫 என்றும் தெளிவுபடுத்தி வடிவேலு, நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்📄. இதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து 💸தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து🤔 வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை🚫 விதிக்கப்படலாம்😱 என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது🔈. தடை விதித்தால் அதை எதிர்த்து😡 நீதிமன்றம்🏛 செல்வது குறித்து வக்கீல்களுடன் ⭐வடிவேல் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது😳.

புதுக்கோட்டை வரும் திமுக செயல் தலைவர்

வரும் 22 ம் தேதி திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டை வரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அன்று இரவு ஜேஜே கல்லூரியில் தாங்குகிறார். மறுநாள் காலை திலகர் திடலில் திமுக முன்னாள் தீர்மான குழு உறுப்பினர் முத்துச்சாமி படத்தை திறந்து வைத்து உறையாற்றுகிறார் . அன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு மாலை புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் செல்கிறார் .

Monday, 16 April 2018

வாரியம் அமைக்காததற்கு கர்நாடக தேர்தல்தான் காரணம்: டிடிவி தினகரன்

வாரியம் அமைக்காததற்கு கர்நாடக தேர்தல்தான் காரணம்: டிடிவி தினகரன்

சென்னை: கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்வதாக எம்எல்ஏ. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆட்சி முடிந்ததும் யார், யார் கைது செய்யப்படுவார்கள் என்பது தெரியும் என்றும் கூறியுள்ளார்.

நாகர்கோவில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிலைய அலுவலக குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

நாகர்கோவில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிலைய அலுவலக குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிலைய அலுவலக குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி வரை குடிநீர் கட்டண பாக்கி வைத்துள்ளதால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Sunday, 15 April 2018

சென்னை ✈விமான நிலையத்தில் வாக்கலேட்டர் வசதி தொடக்கம்

சென்னை ✈விமான நிலையத்தில் வாக்கலேட்டர் வசதி தொடக்கம்

சென்னை ✈விமான நிலையத்தில் வாக்கலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது👏. உள்நாட்டு ✈விமான நிலையத்தை 🚇மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் வாக்கலேட்டர் வசதி கடந்த 📆மார்ச் மாதமே தொடங்கி வைக்கப்பட்ட போதிலும், அப்போது 🌎சர்வதேச விமான நிலையத்துக்கான வாக்கலேட்டர் பணிகள் நிறைவடையாததால்😳 பொதுமக்கள்👥 பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தது😯. இந்நிலையில் தற்போது பணிகள் முடிந்து சர்வதேச விமான நிலையத்துக்கான வாக்கலேட்டரை😍, விமான நிலைய ஆலோசனை🤔 குழு தலைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்👏. 💸80 கோடி ரூபாய் செலவில் 12 வாக்கலேட்டர்கள் 602 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன🤗. இதன் மூலம் பயணிகள் மீனம்பாக்கம் 🚇மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ✈விமான நிலையத்திற்கு உடைமைகளுடன் சிரமமின்றி சென்றடைய முடியும்👍.

Saturday, 14 April 2018

முன்பதிவு இல்லா✍ ரயில் டிக்கெட்டுகளை செயலிகளில்📲 - இன்று முதல் அமல்

முன்பதிவு இல்லா✍ ரயில் டிக்கெட்டுகளை செயலிகளில்📲 - இன்று முதல் அமல்

முன்பதிவு இல்லா ரயில்🚊 டிக்கெட்டுகளை செயலிகள்📲 மூலம் பெறும் வசதி தெற்கு ரயில்வேயில்🛤 இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு🗓 அறிமுகப்படுத்தப்பட்ட யு.டி.எஸ் எனப்படும் மொபைல் மூலம் முன்பதிவு✍ இல்லா டிக்கெட் பெறும் முறை சென்னை🏙 மற்றும் குறிப்பிட்ட புறநகர் ரயில் நிலையங்களில் கொண்டு வரப்பட்டு😯 நாளடைவில் விரிவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தெற்கு ரயில்வே🚊 முழுவதும் இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தது👍. யு.டி.எஸ். ஆன் மொபைல், ஆர் வாலெட் ஆகிய செயலிகளை📲 பதிவிறக்கம் செய்து இணையதள💻 மூலமாகவோ அல்லது வாலெட்டில் பணம்💸 நிரப்பியோ டிக்கெட்கள்🎫 பெற முடியும். ஆனால் சம்மந்தப்பட்ட ரயில் நிலையத்தில்🛤 இருந்து 25 மீட்டர் முதல் 5 கி.மீ தொலைவில்🙄 இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் டிக்கெட்🎫 பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது